கோவை, ஜனவரி 25
கோவை, பச்சாபாளையத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆண், பெண் என இருபாலினத்தவர்களும் கல்வி பயின்று வரும் நிலையில் வெளிமாவட்ட மாணவர்களுக்கு என கல்லூரிக்கு உட்பட்ட விடுதி உள்ளது.
இந்நிலையில், மாணவிகளுக்கான விடுதி கழிப்பறையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.