கோவை மாநகராட்சியைச் சேர்ந்த செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவாக நூலகம் திறக்கப்பட்டது.
கோவை, ஜனவரி 24
கோவை மாநகராட்சியைச் சேர்ந்த செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவாக நூலகம் திறக்கப்பட்டது.

ஆர்க் பவுண்டேஷன் மற்றும் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப், மாநகராட்சியுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவாக நூலகம் கட்டப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், பள்ளி மாணவிகளைக் கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சி கல்வி அலுவலர் உமா, மாநகராட்சி செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆர்க் பவுண்டேஷன் மற்றும் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.