கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார துவக்க விழா கண்காட்சி மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை, ஜனவரி 24

கண்காட்சியில் அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுப் பொருட்கள், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. முன்னதாக, நடைபெற்ற பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கண்காட்சி வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் நிறைவு நாளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெறும் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, நடன போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.