எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழுவார்- புகழேந்தி பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழக காவல்துறை காக்கி சட்டையை போட்டுக்கொண்டு தமிழக அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். தங்களுடைய அணி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பேச்சைக் கேட்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும். காலச்சக்கரம் மீண்டும் சுழலும்.

நாங்கள் பார்த்து உட்கார வைத்தவர்தான் தற்போதைய முதலமைச்சர். இந்த முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்படி எடப்பாடி பழனிச்சாமியையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் டி.டி.வி. தினகரன் என பிரதமர் மோடி உணர்ந்து விட்டார்.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவு என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய். மீண்டும் மெரீனா கூட்டம் போல மாணவர் பட்டாளமும், இளைஞர் பட்டாளமும் தினகரன் பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது.

தந்தை பெரியார் விருதைக் கொண்டு போய் கீழ்த்தரமான பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது. துணிவிருந்தால் நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிடுங்கள்.

இவ்வாறு புகழேந்தி பேட்டியளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...