கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
கோவை, ஜனவரி 22
கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகமான வாகனங்கள் வருவதால் இம்மருத்துவமனையில் பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த சூழலில், ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்வதாக புகார் எழுந்தது.
இதனிடையே, மருத்துவமனையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை அம்மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை தொடங்கினர். அப்போது புற்றுநோய் வார்டின் முன்புறமும், மருத்துவமனையின் கேண்டீன் முன்புறமும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரண்டு கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் கேட்பாரற்று இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.