நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு ஒய்.பி.ஏ அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஈ.அருணாச்சலம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.வி. ராஜன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சி.எஸ்.வேணுகோபால் சிறப்புரையாற்றினார்
நீலகிரி, ஜனவரி 21
நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு ஒய்.பி.ஏ அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஈ.அருணாச்சலம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.வி. ராஜன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சி.எஸ்.வேணுகோபால் சிறப்புரையாற்றினார்.

இதனிடையே, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசுகள் ஆபத்தை உருவாக்கியுள்ளன. தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிகள் செய்து வருகின்றன. 19 பொதுத்துறை வங்கிகளை 5 அல்லது 6-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அறிவிப்பு வரும்.
ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைத்ததால் அந்த வங்கி பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு வட்டியைக் குறைத்து, சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் வாராக் கடன் அளவு அதிகமாக உள்ளது. வங்கித்துறையில் 20 சதவிகிதம் வாராக் கடனாகும். இந்தியாவில் ரூ. 15 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. இது 12 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள கடனாகும்.
இதை வசூலிக்க நாங்கள் அழுத்தம் கொடுத்தாலும், அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன.
தற்போது, அரசு நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது.
இதன் மூலம் ரூ.ஒரு லட்சத்துக்கும் மேலாக உள்ள வைப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து எடுக்க வழி வகை செய்யும். இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து, வைப்புத்தொகையைத் திரும்ப பெற்று வருகின்றனர். இந்த மசோதாவால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். இது தேவையற்ற மசோதா. அரசின் தவறான அணுகுமுறை.
இந்த மசோதாவைத் திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கி நடந்து வருகிறது. மார்ச் 25-ம் தேதி வரை இந்தியா முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.