கோவையில் ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை, ஜனவரி 21

ஆண்டாள் குறித்து கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு இந்து அமைப்புகளும் ஆண்டாள் பக்தர்களும் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆன்மீக அடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் ஆண்டாள் குறித்து அவதூறு பேசியதாக வைரமுத்துவுக்கு எதிராகவும், ஏழுமையான் கடவுளை இழித்துப் பேசியதாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கண்டித்தும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாத்திகர்கள் என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.