கோவையில் டி.டி.ரத்தின சபாபதி பிள்ளை தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 21

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் பேசியதாவது:-

நீதித்துறையில், நீதித்துறை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். வழக்குகள் தேக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரத்தின சபாபதி பிள்ளை செய்த சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், தபால் உரை வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை செயல்படுவதற்கு, போலீசாரின் பங்கு முக்கியமாக உள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும், சட்டத்தை செயல்படுத்தவும் கடுமையாக உழைக்கின்றனர். நீதித்துறையானது, போலீசார் செயல்படுத்தும் சட்டங்களை கண்காணிக்கும் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு, நீதிபதி பாஸ்கரன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை தபால் துறை அதிகாரி சம்பத் ஆகியோர் பேசினர். ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு, ரோட்டரி கிளப் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்கள் சின்னகம் மன்னன், பெரியமவாதா, தலைமை காவலர்கள் ஆறுமுகம், சிந்தாமணி, சிந்து, ரவி சங்கர், தங்கராஜ், சுபா ஆகியோருக்கு நீதிபதி பாஸ்கரன் விருது வழங்கினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...