கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை, ஜனவரி 21
கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.

திருச்சி சாலை இராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் நேற்று போலிசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதில் போலீசார் சாலையின் நடுவே வந்து ஆட்டோவை மடக்கிப்பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது ஆட்டோவின் பின்னால் வந்த சூலூரை சேர்ந்த விஜேஸ்குமார் (35) என்ற வாலிபர் நிலை தடுமாறியதோடு ஆட்டோவில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.
மேலும், போலீசார் அஜாக்கிரதையாக வாகனத் தணிக்கை செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.