நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
நீலகிரி, ஜனவரி 19
நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
இன்று துவங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர் வரும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சீகூர், சிங்கார மற்றும் தெங்குமறஹாடா வனத்தில் சுமார் 368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளைய வனக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், வன விலங்குகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரடி பார்வையில் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.