கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, ஜனவரி 19
கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்வபுரம் தேவேந்திர வீதியில் வசித்து வந்தவர் இராமாயி அம்மாள் (77). கடந்த 9-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனர்.
தொடர்ந்து, சுண்டாக்காமுத்தூர் சாலை, புட்டுவிக்கி பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் சேகர் பாபு (27) என்பதும், மூதாட்டி கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகர் பாபு-வை கைது செய்து சிறையிலடைத்தனர்.