பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதின்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று நடைபெறுகிறது.
திண்டுக்கல், ஜனவரி 19
பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதின்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படுவது பழனி. இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் தைப் பூசம் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்துக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சந்திரகிரகணம் காரணமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை நேரத்திற்குப் பதிலாக காலையில் தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.