திருமண ஆசைகாட்டி ஆண்களை ஏமாற்றிய நடிகையை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார்.


கோவை, ஜனவரி 18

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்து சென்று சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட சுருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், சுருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்துசென்ற சைபர் கிரைம் போலிசார் அவர்களிடம் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



இதனிடையே, ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ருதியால் பாதிக்கப்பட்ட நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரும் வழக்கு விசாரணையை பார்க்க நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில், மேட்ரிமோனியல் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து ஏமாற்றுவதை ஸ்ருதி வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதுவரை ரூ. 80 லட்சம் வரை தான் ஏமாந்துள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. என்றார். 

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...