கவிஞர் வைரமுத்துவை எதிர்த்து பஜனை பாடிய இந்து அமைப்பினர்

ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 17

ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து ஆங்காங்கே பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி, ராஷ்டிரிய ஸநாதன சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அப்போது திருப்பாபை பாடல்களை பாடியபடி பஜனை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே அனுமதியின்றி பஜனை நடத்தக்கூடாது என காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...