கோவையில் அனுமதியின்றி நடத்த முயன்ற சேவல் சண்டையை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸார் மற்றும் சேவல் சண்டையை நடத்த முயன்றவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஜனவரி 16

பெரிய கடை வீதி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவில் வீதியில், விவேகானந்தர் பேரவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு சென்ற பெரிய கடை வீதி போலீஸார் அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டையைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் சமரசப்படுத்தியதையடுத்து, சேவல் சண்டை தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.