கோவையில் களைக்கட்டிய தமிழர் திருவிழா

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.


கோவை, ஜனவரி 15

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பீளமேடு பகுதியில் நயம் அமைப்பு சார்பில் தமிழர் திருவிழா என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உறியடித்தல், இளவட்டக் கல் தூக்குதல், வழுக்குமரம், பானையில் தண்ணீர் சுமந்து செல்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், குழந்தைகள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் உற்சாகமாகப் பயணம் செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.



கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நகரத்தில் முதல் முறையாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினரும் நமது கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இக்கலைகள் அழியாமல் இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

இந்ந நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டு இருப்பதாகவும், பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கங்கா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...