நரசிபுரம் அருகே 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 15
நரசிபுரம் அருகே 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கே. அவினாசி (85). இன்று அதிகாலை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த இவரை அவ்வழியாக வந்த காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவினாசியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இந்த ஆண்டு யானை தாக்கி மனித உயிரிழப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.