கோவை ஜனவரி 14
கடந்த ஆண்டு 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், மாட்டு தீவனங்கள் போன்றவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன்.
இந்த ஆண்டு வறட்சியிலும் சிறு மலர்ச்சி போல் இரண்டு மாதங்கள் பெய்த மழையினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சற்று மிகிழ்ச்சியாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.
"பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சற்று ஆறுதலாகதான் அமைந்தது. இந்த திருநாளில் இயற்கை அன்னை என்றும் மழை பொழிய விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்",என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தெரிவித்தார்.
சென்ற ஆண்டு கரும்பு ஒரு ஜோடி சுமார் ரூபாய் 80 விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூபாய் 100 வரை விற்கப்படுகிறது மேலும் கரும்பு வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் கரும்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.