வெள்ளலூரில் ரூ.2 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடி செலவிலான புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 13

வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடி செலவிலான புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டும்பணி துவக்க விழா நிகழ்ச்சின் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து கட்டும்பணியினை தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது, ஜெயலலிதாவின் எண்ணங்களை சாத்தியமாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்மிகு ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தின் மாநகராட்சியினை ஒட்டியுள்ள பகுதிகள், ஊரக மற்றும் கிராமப்பகுதிகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்கும், மாநகர பகுதிகளை போலவே அனைத்துவித அடிப்படை வசதிகளிலும் தன்னிறைவு பெறவும் புதிய திட்டங்களும், பல புதிய முயற்சிகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாகவே, இன்று வெள்ளலூர் பேரூராட்சியில் 2ஏக்கர் பரப்பளவில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்படுகின்றது. 

இப்பேருந்து நிலையத்தில், பேருந்து நிறுத்த இடம், தாய்மார்கள் பாலுட்டும் அறை, முன்பதிவு மையம், கடைகளின் எண்ணிக்கை, ஏடிஎம்-கான அறை, உணவகம், பேக்கரி, பயணிகள் காத்திருப்பு இடம், கட்டண கழிப்பிடம், இலவச கழிப்பிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறை, நேரம் காப்பாளர் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

 

மேலும், ஜெயலலிதா ஆட்சியில் வெள்ளலூர் பேரூராட்சி பகுதியில் நீண்ட கால கோரிக்கையாக இருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், நவீன எரிவாயு தகனமேடை ரூ.1.08 கோடி மதிப்பிலும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.26 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்சமயம், செட்டிபாளையம், வெள்ளலூர் இணைக்கும் வகையில் 1.02 கி.மீ தூரத்திற்கு ரூ.1.00 கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மக்கள் பிரதிநிதிகளை சந்திந்து நீங்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன். எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதன்பேரிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை பூர்த்தி மக்கள்நலன் காக்கும் அரசாகத் தமிழக அரசு விளங்கி வருகின்றது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன், கோட்டாட்சியர் மதுராந்தகி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கணேஷ்ராம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...