கோவை மாநகர போலீசாருக்கு ”பாடி ஒன் கேமிரா” வழங்கத் திட்டம்: போக்குவரத்து துணை ஆணையர்

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 13

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் கேமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்தக் கேமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அனுப்பப்படும். அந்தந்தக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. போலீசாரை கண்காணிக்கும் இந்தத் திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இதுபோன்ற கேமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மாநிலத்தின் 12 மாநகராட்சிகளுக்கு 'டிரையல்' அடிப்படையில் 'பாடி ஒன் கேமிரா'க்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இந்த கேமிராக்கள் உபயோகிக்கப்படாத நிலையில் நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் கேமிரா'வை உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். 

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த கேமிராக்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வியை மாநகர காவல்துறையிடம் முன்வைக்கப்பட்டது.



இதற்கு பதிலளித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "கோவையில் இதுபோன்ற ஒரு கேமிரா உள்ளது. அந்த கேமிரா தற்போது 'டிரையல்'லில் (Trial) உள்ளது. இந்த கேமிரா தேவை என்றால் 'பாடி ஒன் கேமிரா' வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்" என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...