மாணவர் தற்கொலை விவகாரம்: ஆசிரியரிடம் முறையாக விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை

கோவை, ஜனவரி 12

கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 



ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரின் மதியம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை பள்ளியின் உதவியாளர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜாபரை வீட்டுக்கு அழைத்து வந்த உதவியாளரிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்ற விவரத்தை மாணவரின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்த ஜாபர், கதவை தாழிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவர் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஜாபரின் உறவினர்கள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுகுறித்த மனுவினையும் அளித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...