எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கோவை, ஜனவரி 12

வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் சார்பில் அம்மருத்துவமனை வளாகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். பி. அசோகன் இவ்விழாவை குத்துவிழக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.