கோவையில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான ”மா ஹெல்த்கேர்” சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 



அவினாசி சாலையில் அமைந்திருக்கும் மா ஹெல்த்கேரில் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான பிரசவ காலத்திற்கு முந்தைய சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்கு பிறகு வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதெற்னெ இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடன், மா ஹெல்த்கேர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. 

இது குறித்து மா ஹெல்த்கேர் நிர்வாகம் கூறுகையில், பிரசவத்திற்கு வரும் பெண்களையும், அவர்களின் குழந்தைகளும் பாதுகாப்பது குறித்து தயார்படுத்தியுள்ளோம். குழந்தைப் பெற்றெடுப்பதற்கு முன்பு தாயிற்கு கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆலோசனைகளை வழங்கும். இந்த ஆலோசனைகள் சுகப்பிரசவத்திற்கு மட்டுமல்ல. பிரசவ காலத்தில் ஊழியர்கள் பணிவிடை செய்யும் முறையைத் தளர்த்தி, தாய் தங்களுக்கு பணிவிடை செய்வதைப் போல உதவிகள் செய்யப்படும். மேலும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் முறை மற்றும் பராமரிப்பது போன்றவை செயல்முறையில் செய்து கற்றுக் கொடுக்கப்படும். எனக் கூறப்பட்டுள்ளது. 

மா ஹெல்த்கேர் நிர்வாகமானது, மருத்துவமனைகளுக்காகவும், கர்ப்பிணிப் பெண்களுக்காகவும் 88705 -70222 என்ற தொலைப்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், விபரங்களுக்கு www. ma-motherhood.com என்ற இணையதள சேவை அணுகலாம்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...