”பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு”

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, ஜனவரி 10

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார். 



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் கோவையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே மற்றும் சுபாஷினிஅலி, உ. வாசுகி, சுதாசுந்தராமன், சுகந்தி, பாலபாரதி உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சரோஜ்பவனில் இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரியம்தாவ்லே கூறுகையில், பா.ஜ.க. அரசு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருகின்றனர்.  மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் அனைத்து தரப்பினரும் பாதித்தனர் என்றாலும்கூட நேரிடையாக பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களால் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளது. 

முத்தலாக் முறையை தடைசெய்ய வேண்டுமென்பதில் மாதர் சங்கத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடுப்பு சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தராது. இச்சட்டம் இயற்ற அனைத்து தரப்பினரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், இடதுமுன்னணியின் வெற்றிக்காக மாதர் சங்கம் பிரச்சாரத்தில் ஈடுபடும். என்றார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...