பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் தொழிலாளர் அலுவலகத்தில் மனு

பிரிக்கால் பிளாண்ட்-1ல் பணிபுரியும் 25 தொழிலாளர்களை அந்நிர்வாகம் நேற்று (ஜன. 10) தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 10

பிரிக்கால் பிளாண்ட்-1ல் பணிபுரியும் 25 தொழிலாளர்களை அந்நிர்வாகம் நேற்று (ஜன. 10) தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான, பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் துணைச் செயலாளர் கே. ரதீஸ்குமார் கூறுகையில், "தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரிக்கால் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. கடைசியாக போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக உற்பத்தி செய்துதருமாறு தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கிறது. இதுகுறித்து, தொழிலாளர் இணை ஆணையரிடம் ஏற்கனவே புகாரளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நிர்வாகத்தின் அதிகாரப் போக்கை எதிர்த்து கேள்விகேட்ட 25 தொழிலாளர்களை இரண்டு நாள் தற்காலிக பணிநீக்கம் செய்வதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போது, போராடிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கியிருப்பது மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதனால், இரண்டு நாள் சம்பளத்தை இழந்து பெரும் மன உளைச்சலை சந்தித்து வருகிறோம்" என்றார்.

இப்பிரச்சனை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கோவை மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாதாரண நிர்வாகமாக ஆரம்பித்த பிரிக்கால் நிர்வாகம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை அமைத்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு ஒரே காரணம், அந்நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமே. இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உழைப்பைச் சுரண்டும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் பிரிக்கால் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த வருடம் தொழிற்சங்கத்தோடு இணைந்து போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக பணிச் சுமையை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வருகிறது இந்நிர்வாகம். எந்த விசாரணையும் இல்லாமல் திடீரென்று தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவை அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்கள். 

எனவே, தொழிலாளர் இணை ஆணையர் முறையாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனும், உரிமைகளும் மீட்கப்பட வேண்டும்" என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...