கோவை விழாவையொட்டி, தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை கண்டு ரசித்த மாணவர்கள்

”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.

கோவை ஜனவரி 9

”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.



கோவையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் 'கோவை விழா 2018' ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணவராயர் பவுண்டெசன் சார்பாக கோவை அரசு கல்லூரி, தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோவை இராமநாதபுரத்தில் உள்ள இந்திய தொல்லியல் அருட்காட்சியகம் சுற்றி காண்பிக்கப்பட்டது.



இது குறித்து வாணவராயர் பவுண்டெசன் பொறுப்பாளர் ஜெகதீசன் கூறுகையில், "மாணவர்களுக்கு பண்டைய காலம், காலச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவை தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.

இந்தத் தொல்லியல்துறை அருங்காட்சியத்தில் சுமார் 2,000 ஆண்டு பழமையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களாகும் என தொல்லியில் துறை அலுவலர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார்.



அருங்காட்சியகத்தைச் சுற்றி பார்த்த மாணவர்கள் பழங்கால பொருட்கள் குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். மேலும், அவர்கள் கூறுகையில் இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, நிறைய விஷயங்கள் கற்றுகொள்ள முடிந்தது என்றனர்.



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...