கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 9

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய உள்ள பணியாளர்கள், இளங்கலைபட்டப்படிப்பு, கணினி இயக்குத்திறன், தட்டச்சுதிறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.
இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது பணி நியமன முகமையின் விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்கச் சேவைக்கட்டணம் ஆகியவற்றைத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வரும்படி, ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.