மாநகராட்சி மற்றும் நகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வேலுமணி ஆய்வு

கோவை, ஜனவரி 08

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தி வரும் (ஸ்மார்ட் சிட்டி) சீர்மிகு நகர திட்டங்கள் மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். 

இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில்,  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு ஜுன் 2015ஆம் ஆண்டு சீர்மிகு திட்டத்தை அறிவித்தது. தமிழகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சீரிய முயற்சியால் மாநில அரசு நிதியுடன் இணைந்து 12 சீர்மிகு நகரங்களை ஒதுக்கியுள்ளது. இதன்திட்ட காலம் 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. அதற்கு, இணையாகத் தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது.  

சீர்மிகு திட்டத்திற்கு முதலாவது சுற்றில் (2015-16) பெருநகர சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளும், 2வது சுற்றில் (2016-17) மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகளும், 3-ம் சுற்றில் (2017-18) திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், 4-ம் கட்ட தேர்வுக்காக, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகள் மத்திய அரசிடம் நவம்பர் 30, 2017ல் கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.   

தேர்ந்தெடுக்கப்பட்ட 10  சீர்மிகு நகரங்களில், மொத்தம் ரூ.13,425.65 கோடி மதிப்பீட்டில் 173 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட 173 திட்டங்களில், 3 திட்டங்கள் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன, 14 திட்டங்கள் ரூ.491.97 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 37 திட்டங்களுக்கு ரூ.1,795.92 கோடி மதிப்பீட்டில் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலை உள்ளது. 119 திட்டங்களுக்கு, ரூ.11,134.12 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சீர்மிகு நகரங்களுக்கான திட்டங்கள் அனைத்தும் முன்னேற்ற நிலையில் உள்ளன. ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் 31.01.2018-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை விரைந்து முடித்து 31.03.2018-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் எனவும், குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.

அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டம் 

மத்திய அரசு மாநில அரசுகளை உள்ளடக்கி,  அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தை (அம்ருத்) 2015ஆம் ஆண்டு துவக்கியது.  இத்திட்டத்தின் கீழ்,  குடிநீர், கழிவு நீர் வசதி மற்றும் கழிவு நீர் கசடு அகற்றும் மேலாண்மை, மழை நீர் வடிகால், நடைபாதைகள் மேம்படுத்துதல், பூங்கா மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம்  அளித்து  நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள், 1 பேரூராட்சி மற்றும் சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட முந்தைய நகராட்சிகளான ஆலந்தூர், அம்பத்தூர், மாதாவாராம் மற்றும் திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் கோவை மாநகருடன் இணைக்கப்பட்ட  முந்தைய குறிச்சி நகராட்சி  என மொத்தம் 33 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் திட்டம் காலம்  5 ஆண்டுகள் (2015-16 லிருந்து 2020வரை).  

இத்திட்டங்களின் நிதி ஆதாரத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு, 10 இலட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு 33.33  சதவீதம் மானியமாகவும், 10 இலட்சத்திற்குக் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு  50 சதவீதம் மானியம் வழங்குகிறது.  பசுமை பகுதி அமைத்தல் (பூங்காக்கள் மேம்பாடு) பணிகளுக்கு அனைத்து நகரங்களுக்கும் மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

மாநில அரசின் பங்காக அனைத்து நகரங்களின்  திட்டங்களுக்கும் 20 சதவீதம் மானியமாகவும், மீதமுள்ள தொகை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகையில் மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசினால், 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.11,489 கோடி மதிப்பீட்டில் 428 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

1. குடிநீர் திட்டம்   - 18  பணிகள் (ரூ.6,508.73 கோடி)

2. பாதாளச் சாக்கடை திட்டம் - 18 பணிகள்  (ரூ.4,757.60 கோடி)

3. பூங்காக்கள் மேம்படுத்துதல் -392 பணிகள் (ரூ.222.67 கோடி) 

அனுமதிக்கப்பட்ட 428 திட்டங்களில், இது வரையில், ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் 83 பூங்காக்கள் மேம்பாடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மேலும், 10 குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.2,461.36 கோடி மதிப்பீட்டிலும், 5 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ரூ.706.83 கோடி மதிப்பீட்டிலும், 171 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் ரூ. 95.97 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 186 திட்டங்கள் ரூ.3,264.16 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

138 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் ரூ.81.79 கோடி மதிப்பீட்டிற்கும், 6 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1, 701.54 கோடி மதிப்பீட்டிற்கும் மற்றும் 1 குடிநீர் திட்டப் பணிக்கு ரூ.40.50 கோடி மதிப்பீட்டிற்கும், ஆக மொத்தம் 145 திட்டப் பணிகளுக்கு 1,823.83 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

நெம்மேலியில் கூடுதலாகச் சென்னை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.1,079.89  கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு மதிப்பாய்வில் உள்ளன. ஒரு குடிநீர் திட்டம் மற்றும் 5 பாதாள சாக்கடைத் திட்ட பணிகளுக்கு ரூ.1,770.23 கோடி மதிப்பீட்டில் விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவும், 4 குடிநீர் திட்டங்கள் மற்றும் 2 பாதாள சாக்கடைத் திட்ட பணிகளுக்கு ரூ.3505.97 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அனைத்து திட்டப் பணிகளும் 31.03.2018-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து திட்டங்களையும் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும்  அடிக்கடி ஆய்வு செய்து  திட்டங்களின் தரத்தினை உறுதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...