மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு நிதியுதவி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார்.

கோவை, ஜனவரி 8

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டிற்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் சுத்தம், சுகாதாரம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியிலும் 4 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டியானது பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் நடத்தப்பட்டு போட்டிக்கு மூன்று பேர் வீதம் என வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.1500 ரூ.1300 மற்றும் ரூ.1100 பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாராண நிதியிலிருந்து விபத்தில் மரணமடைந்த 2 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், மேலும் 2 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ. 8 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.அய்யண்ணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) சி.கிருஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...