ரேடியோ சிட்டியின் 'கோயம்புத்தூர் சிட்டிசன் - 2018' விருதுகள்

ரேடியோ சிட்டி சார்பாக வழங்கப்படும் 'கோயம்புத்தூர் சிட்டிசன் - 2018' விருது வழங்கும் விழா, ப்ரோசோன் மாலில் சனிக்கிழமை (06.01.2108) நடைபெற்றது.

கோவை, ஜனவரி 8

ரேடியோ சிட்டி சார்பாக வழங்கப்படும் 'கோயம்புத்தூர் சிட்டிசன் - 2018' விருது வழங்கும் விழா, ப்ரோசோன் மாலில் சனிக்கிழமை (06.01.2108) நடைபெற்றது.



பொழுதுபோக்கு, அழகு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாய அக்கறை மற்றும் பொது சேவை போன்ற பல்வேறு பிரிவுகளில், கோவையிலிருந்து சாதனை படைத்த மனிதர்களை கெளரவிக்கும் விதமாக வழங்கப்படும் 'கோவை சிட்டிசன் - சீசன் 4'ல் 15 நபர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.



ஈர நெஞ்சம் மஹேந்திரன், மிஸ் இந்தியா அழகி சோனாலி, சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டி குறும்படங்களை தயாரிக்கும் நக்கலைட்ஸ் குழு, இளம் வயது இசையமைப்பாளர் சிவாத்மிகா, நடிகை அதுல்யா, எக்ஸ்.பி.டி குழு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்கு உதவும் ஜாப் கோயம்பத்தூர் வலைதளத்தின் நிறுவனர் ஏக்கானந்த், நோ டம்பிங் குழு, திருநங்கைகளுக்கு ஆதரவளிக்கும் அஞ்சலி ஜெயின், சென்னையில் ஒரு நாள்-2 படத்தின் இயக்குநர் ஜே.பி.ஆர், எடுதர்மா, மக்கள் சேவகர் சுரேஷ்குமார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



குறிப்பாக, அரசு பொதுமருத்துவமனையில் தாய்பாலின்றி வாடும் பிஞ்சு குழந்தைகளுக்கு தாய்பால் சேகரித்து இலவசமாக வழங்கும் கோயம்புத்தூர் பேரண்டிங் நெட்வொர்க் அமைப்பிற்கும், சமீபத்தில் நடந்த ஏ.டி.ஏம் கொள்ளை சம்பவத்தில், அதிவிரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த கோவை மாநகர காவல்துறைக்கும் விருதுகளை வழங்கி கொளரவித்தனர்.



ரேடியோ சிட்டி வானொலியோடு இணைந்து கோவை விழா மற்றும் ரோட்டரி டொளன் டவுன் அமைப்பினர் இந்நிகழ்ச்சியை நடத்தினர்.



விழாவின் ஒரு பகுதியாக பறை இசை, நாட்டுப்புற இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இவ்விழாவில், கோவை மண்ணைச் சேர்ந்த சாதனையாளர்களை பொதுமக்கள் பாராட்டி உற்சாகமளித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...