கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை, ஜனவரி 7
கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
ஜனவரி 7ம் தேதி நடிகர் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கோவை மாவட்ட கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை கோவை ரயில் நிலையத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இவ்விழா கொண்டாடப்பட்டது.

அகில இந்திய கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் ஆர். தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரமங்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு துணி மற்றும் சமையல் உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடும் ஏழை மாணவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.