துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலுமணி

கோவை, ஜனவரி 06

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி சார்பாக மாநகராட்சி அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு மாநகராட்சியில் பணிபுரியும் 2,657 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவித்து, முதற்கட்டமாக 50 துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.22,48,932 மதிப்பீட்டில் ஆண், பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள், ரூ.20,93,716 மதிப்பீட்டில் கையுறை, முகவுறை, தொப்பி, ஒளிரும் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ரூ.7,83,315 மதிப்பீட்டில் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய, மஞ்சள் கொத்து மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள், ரூ.7,59,542 மதிப்பீட்டில் சோப்புகள் (12 எண்ணிக்கை - ஒரு நபருக்கு) மற்றும் ரூ.6,43,829 மதிப்பீட்டில் காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார். 

மேலும், அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் செய்கின்ற பணி கடவுளை விட மேலானது. பணியாளர்கள் பணி செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் துப்புரவு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்றார். 

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியில் பணியிலிருக்கும் போது காலமான 29 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கும், மருத்துவ இயலாமையின் காரணமாக பணி ஓய்வு பெற்ற 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஆக மொத்தம் 32 நபர்களுக்கு (இளநிலை உதவியாளர் உடன் தட்டச்சர் பணியிடம் -1, தேர்ச்சி திறன் உதவியாளர் -1, சுகாதார பணியாளர்கள் -30) கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், காவல் ஆணையாளர் கே.பெரியய்யா, துணை ஆணையாளர் ப.காந்திமதி , உதவி ஆணையாளர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், உதவி ஆணையாளர் (கணக்கு) சுந்தர்ராஜ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...