ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை திமுக, சிஐடியு, தொமுச உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
கோவை, ஜனவரி 06
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை திமுக, சிஐடியு, தொமுச உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருவதால் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கோவையைப் பொறுத்தவரையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் வார இறுதி நாளான இன்று காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.