வால்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் அட்டகாசம் : ரேசன் கடைகள் உடைப்பு

கோவை, ஜனவரி 05

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின. மேலும், கடையினுள் இருந்த ரேஷன் பொருட்களையும் சூறையாடின.



வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா முதல்பிரிவில் நேற்று நள்ளிரவு புகுந்த 13 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ரேசன் கடையை சூறையாடியது. ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்த காட்டு யானைகள் உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு போன்றவற்றை சேதப்படுத்தியது. அப்பகுதியில் சுதாகர் என்பர் நடத்தி வரும் கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இதே போன்று அதிகாலையில் ஐயர்பாடி ரோப்பமட்டம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் கோபால் என்பவர் நடத்தி வந்த கடையை சூறையாடி உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அவை அப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. உபாசி, பன்னிமேடு, பழைய வால்பாறை போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...