கோவை, ஜனவரி 05
டிடிவி தினகரனை பார்த்து எழுந்து நிற்க வேண்டிய நிலை அதிமுக எம்.எல்.ஏ களுக்கு விரைவில் வரும் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனும் பெயரில் ஷரியத் சட்டத்தில் மத்திய அரசு கை வைப்பதை கண்டித்து கோவை கோட்டைமேடு வின்செண்ட் சாலையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில்,
முத்தலாக் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்ப தொடர்ந்து வலியுறுத்த பட்ட பின்னரும், மத்திய அரசு அனுமதிக்க மறுக்கின்றது. தினகரன் சட்டமன்றத்தில் வரும் 8 ம் தேதி நுழையும் போது யாரும் எந்திரிக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தினகரனை பார்த்து எழுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்குவதில் மாற்றுக்கருத்தில்லை. அதே வேளையில், ரத்த சம்மந்தப்பட்ட வாரிசுகளின் கருத்துகளையும் தமிழக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார்.