போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ மனு

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை, ஜனவரி 04

கோவையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-  கோவை மாநகரத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகிலும், காமராஜர் சாலை, திருச்சி சாலை சந்திப்பு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி எந்த நேரமும் நிலவி வருகின்றது. இதற்கிடையே, சிங்காநல்லூர் பேருந்துநிலையம் முன்பு அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி வருகின்றது. இங்கு வரும் வாகனங்கள் சாலையில் ஒழுங்குபடுத்தப்படாததால், அதிக நெருக்கடி நிலைக்கு பொதுமக்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுதவிர, எஸ்என்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்;- போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளை, சீர் செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். நெருக்கடி உள்ள பகுதிகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அதிக போக்குவரத்து நெருக்கடி இருப்பதால், இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தப் போக்குவரத்து பிரச்சினையை உடனடியாக சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார். 

  

இந்த நிகழ்வின்போது,பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, நிர்வாகிகள் கோவிந்தராஜ், சசிகுமார், சேரலாதன், பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...