ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட ஆட்டோக்களை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு



கோவை, ஜனவரி 2




கோவை ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர். 



இது குறித்து இந்து முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினர் T. குணா செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

கடந்த 2003-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன . ஆனால், புனரமைப்பு பணி நடைபெற்று முடியும் வரை ஆட்டோக்களை ரயில் நிலைய முகப்பு பகுதியில் நிறுத்தும் படி அறிவுறுத்தப்பட்டது. 

ஆனால், புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் கார்பரேட் டாக்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட ரயில் நிலைய முகப்பில் ஊட்டி மலை ரயில் எஞ்சின் நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து ஆட்டோக்களை அப்பகுதியிலும் நிறுத்தக்கூடாது என்று கூறி வரும் ரயில்வே நிர்வாகம் போலீசாரை கொண்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. 

ஏற்கனவே ரயில் நிலையத்திற்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் போலீசார் ஆட்டோக்களை அப்புறப்படுத்த கூடாது என்றும், அவ்வாறு செய்தால் இத்தொழிலை நம்பியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 40 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...