மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி, கோவையில் தொடக்கம்

கோவை, டிசம்பர் 29

இந்திய அரசு ஜவுளித்துறை - தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி, அவினாசி சாலையில் உள்ள மீனாட்சி ஹாலில் தொடங்கியுள்ளது.

இன்று (29.12.17) முதல் ஜனவரி 12 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.



இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 55 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 40 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.



'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார் ஈரோட்டைச் சேர்ந்த விற்பனையாளர் திரு.ஆர்.சின்னையன்.



தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு.ஹரிஹரன், சட்டப் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் கைத்தறி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...