”லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி காலி செய்யலாம்”

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி காலி செய்யலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 28

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி காலி செய்யலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக கடைகள் உள்ளன. இதில், ஒரு கடையை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா வாடகைக்கு எடுத்து ‘டிராவல்ஸ் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு வாடகையாக மாதம் ரூ. 3,702 செலுத்தி வந்தார். திடீரென கடை வாடகையை ரூ. 21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாநகராட்சி அளித்த பதில் மற்றும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில் செய்து வருவதால் மாநகராட்சி வாடகையை ஏற்பதா? வேண்டாமா? என்று லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம். லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும் பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால் காவல்துறை உதவியுடன் அவர் அனுபவித்து வரும் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...