"ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" : முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வருகையையொட்டி கோவையில் தி.மு.க.வினர் வைத்த கட்டவுட்

கோவை, டிசம்பர் 27

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.



அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர். 

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...