குடி தண்ணீரில் மிதந்த சடலம்; மேட்டுப்பாளையம் மக்கள் அதிர்ச்சி


கோவை, டிசம்பர் 26

மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்தது இதனால் மேட்டுப்பாளையம் மக்கள் அதிர்ச்சியடையந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சமாண்ணா நீருந்து நிலையம் அருகே மிதந்த இந்த சடலம் மீட்பதற்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்தனர் ஆனால் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொது மக்களே மீட்கும் முயற்சி யில் இறங்கியுள்ளனர்.

"இந்த சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்படுவதால் சமாண்ணா தடுப்பனையில் தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டும் அதன் பிறகே மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், இல்லை என்றால் தொற்று நோய் ஏற்படும் ஆபாயம் உள்ளது," என்று சமூக ஆர்வலர் எம்.ஜெய்குமார் கூறினார்.

மேலும் இப்பகுதி மக்கள் கூறுகையில் அதிகாரிகள் அலட்சியம் இன்றி செயல்பட வேண்டும். பவானி ஆற்றில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அதிகாரிகள் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...