கோவையில் முதன்முறையாக இலவசப் பறை இசை மற்றும் நடனப்பயிற்சி பட்டறை

கோவை, டிசம்பர் 25

கோவையில் முதன்முறையாக இலவசப் பறை இசை மற்றும் நடன பயிற்சி பட்டறை, கோவை ஹோப் கல்லூரியில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்து ஆயுதம் கலைகளின் சங்கமத்தின் நிர்வாக அறங்காவலர் விவேக், அறங்காவலர் சரத்குமார் ஆகியோர் கூறுகையில், பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உருமியாட்டம், நெல்பிடியாட்டம், கரகாட்டம், பரதம், தவில், கிராமிய பாடல்கள், நெருப்பு சாகசம், வீதி நாடகம் போன்ற பல கலைகள் நமது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் ஆகும். தற்போது, இந்த கலைகளில் 90 சதவீதம் அழிந்து வருகிறது. அழிந்து கொண்டு வரும் நமது பாரம்பரிய கலைகளைப் பற்றி இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் பல நிகழ்ச்சிகள் எங்கள் அமைப்பு சார்பில் நடத்தி வருகிறோம்.



இதன் மூலம், கலைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் முக்கியத்துவம், திறன்களை வெளிக்கொண்டு வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்த கலைகள் அனைத்தும் நமது நாட்டின் அடையாளங்கள். இதனை மீட்டெடுப்பது எங்களின் குறிக்கோள். இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக பறையாட்டம் பற்றி விழிப்புணர்வு மற்றும் இசை, நடன பயிற்சி நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சி கோவை, அவிநாசி சாலை, ஹோப் கல்லூரியில் உள்ள கிளஸ்டர் திரைப்பட நிலையத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியினை எங்கள் அமைப்புடன் சேஞ்ச் டிரஸ்ட், கோவை கலைக்கூடம் இணைந்து நடத்தினோம். பறையாட்டம் இசையின் ஆதி என்றும் கூறலாம். ஏனெனில், முன்னோர் காலத்தில் சாமியினை அழைக்கப் பறை இசையை வசிப்பர். அதுமட்டுமல்லாது, மருத்துவ வசதி இல்லாத காலத்தில் ஒருவர் உயிருடன் இருப்பது அறிய பறை இசையினை வாசிப்பார்கள். வாசிக்கும்போது அவரது உடல் அசைந்தால் உயிருடன் உள்ளார் என்பது தெரிந்து விடும். எனவே, தற்போது வரை சாவு ஊர்வலத்தில் பறை இசைக்கின்றனர். மேலும், ஆதிமனிதன் தன்னை விலங்கிடம் இருந்து பாதுகாத்து கொள்ள பறை இசை அடித்து விரட்டுவான்.

பறையாட்டம் இசைத்து நடனம் ஆடுவதால் உடற்பயிற்சி செய்யும் செயல் போன்றது. உதாரணமாக, அக்குபஞ்சர், மனோத்துவ மருத்துவ முறை என்பது போன்று பல வரலாறு கூறப்படுகிறது. இந்த கலையினை கல்வியாளர்களும் கற்று கொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தக் குழுவில் 8 முதல் 25 பேர் வரை இசைத்து நடனம் ஆட இயலும். தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக, 12 வகையான கலைகள் குறித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் விசாரணை திரைப்பட இயக்குனர் ஆட்டோ சந்திரன், தூய்மை இந்தியா திட்டத்தின் அம்பாஸ்டாரும், கோவை குயின், ஐகான் ஆப் கோயம்புத்தூர் போன்ற விருதுகளை வாங்கியவரும், சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், பறை இசை பயிற்சியில் மாணவர்களாகவும் கலந்து கொண்டனர். கோவை மற்றும் அதன் சுற்று பகுதியினை சேர்த்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, 2 வேளை தேனீர் வழங்கப்பட்டது.

இந்த பாரம்பரிய கலையினை பல நிகழ்ச்சிகளிலும் நடத்தி வருக்கிறோம். நிகழ்ச்சி குறித்த தகவலுக்கு 9843176198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்றனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...