சின்ன எம்.ஜி.ஆராக தினகரன் வெற்றி - புகழேந்தி

கோவை, டிசம்பர் 29

சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி  தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்து வருவதையடுத்து, கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தலைமையில்

பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள்  கொண்டாடினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி,  எம்.ஜி.ஆர்.நினைவு தினமான இன்று சரித்திரம் நடந்துள்ளதாகவும்,  சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை என்றாலும் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும்,  திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலையில் தேர்தல் முடிவுகள் உள்ளதாக கூறிய அவர், 50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் தினகரன்  வெற்றிப்பெறுவதுடன், 

சசிகலா வழியில் டிடிவி தினகரன் முதல்வராக அனைவரும் விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும் உறுதி அளித்தார். 

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டா அதிகமாக உள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக கிடையாது என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த அலங்கோலமான ஆட்சியின் நிலையையே ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் முடிவு காண்பிப்பதாக அவர் விமர்சித்தார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...