50 மி.கி. அளவில் இயேசு சிலைகளை உருவாக்கி கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்ற தங்க நகைத்தொழிலாளி

கோவை, டிசம்பர் 23

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.

மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...