குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை : மத்திய அரசு புதிய சட்டம்

டிசம்பர் 23

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது.

குடிபோதையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. 

அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனைக் கிடைக்கும் வகையிலான புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வழிகாட்டுதல் குழு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிக்கையை மாநிலங்களவையில் நேற்று சமர்பித்தது. இதில், 15 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, குடிபோதையில் வாகனத்தை இயக்கி உயிர் இழப்பு ஏற்படுத்தினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், 3-வது நபருக்கான காப்பீடு தொகையை பெரும்பாலான இரண்டு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பது இல்லை என்றும், இதனால், விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படும் நபர் உரிய இழப்பீடு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. அவற்றையும் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்படுகிறது. இனி வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது 3-வது நபருக்கான வாழ்நாள் காப்பீட்டுத் தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் பல வரையறைகளும் அதில் இடம் பெறுகின்றன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...