கோவை நேரு மைதானத்தில் தேசிய கால்பந்து போட்டிகள் தொடக்கம் : அமைச்சருடன் நேரில் கண்டு ரசித்த எம்எல்ஏக்கள்

கோவை, டிசம்பர் 22

கோவை நேரு மைதானத்தில் தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியை, அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன், கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் நேரில் கண்டு ரசித்தனர். 



 சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், தேசிய அளவிலான சிறந்த 10 அணிகள் மோதும் லீக் போட்டி, கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

தற்போது சர்வதேச தரத்தில் உள்ள கால்பந்து மைதானமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவை நேரு மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதனை,  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி,  எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். 

போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள்: கொல்கொத்தா ஈஸ்ட்பெங்கால் கிளப், மோகன்பகான், கோவா சர்ச்சில் பிரதர்ஸ், இம்பால் நெரோகா கால்பந்து கிளப், ஐஸ்வால் கால்பந்து கிளப், பஞ்சாப் மினர்வா கிளப், கேரளா கோகுலம் கிளப், இந்தியன் ஏரோஸ், ஷில்லாங் கால்பந்து கிளப், சென்னை சிட்டி கால்பந்து கிளப்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...