நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதியை விடுதலை செய்ய மறுப்பு : சிறை நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

கோவை, டிசம்பர் 21

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜப்ருவை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜப்ரு என்கிற சையத் ஜாபர் அகமது, கடந்த 2009-ம் ஆண்டு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஜப்ரு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜப்ருவை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரி பவிதா சுல்தானா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுப்பதாக அவரது வழக்கறிஞர் பா.பா.மோகன் தெரிவித்தார். ஜப்ருவை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...