2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை: கொண்டாட்டத்தில் கோவை திமுக வழக்கறிஞர்கள்

கோவை, டிசம்பர் 21

2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து கோவையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருலுகின்றனர்.



நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் ஏ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, வாக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, நீதிமன்ற வளாகத்தில் திரண்ட திமுக வழக்கறிஞர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் நாச்சி முத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...