ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டது விதிமீறல்: தேர்தல் ஆணையம்

டிசம்பர் 20

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்தது தொடர்பான வீடியோ வெளியிட்டிருப்பது விதிமீறல் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக தனியார் டிவி ஒன்றிற்குத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டியளிக்கையில், ஆர்.கே. நகர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது மிகப்பெரிய விதிமீறல். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் பற்றிய வீடியோ தேர்தல் பிரச்சாரமாகவே கருதப்படும்.

வீடியோ வெளியிடப்பட்டது குறித்து தினகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதில், அவருக்கு இரண்டு வருடச் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...