மாடிகாய்கறித் தோட்டம் அமைக்க மானியவிலையில் விதைகளை வழங்கிய அரசுக்கு பயனாளிகள் நன்றி

கோவை, டிசம்பர் 19

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை மூலம் மாடிகாய்கறி தோட்டம் அமைக்க மானியவிலையில் விதைகளை வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். 

கோவை மாவட்டத்தில் 2016-2017 ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வீட்டுகாய்கறி தோட்டம் அமைக்க சிறுதளைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகர்புற மக்களுக்கு பசுமையான, பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு இல்லாத காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிக்க அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அரசு உணவுப் பாதுகாப்பில் நிலைத்தன்மையை அடையவும், அனைவருக்கும் போதுமான உணவு கிடைத்திடும் வகையிலும் விவசாயத்துறைக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து அதிகளவிலான நிதியொதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் திட்டங்களுக்கு வலுசேர்க்கின்ற வகையிலும், தீவிரமாக திட்டங்களை செயல்படுத்துவதிலும், கோவை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறையும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. 

கோவை மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களின் உணவுத்தேவைகளை தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம், மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.  இதன்மூலம் நிலமில்லாத மக்கள் கூட தங்களது வீட்டின் மாடிகளில் தோட்டம் அமைத்து தினசரி காய்கறி, கீரை போன்றவற்றினை பயிர்செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், வியாபார ரீதியாகவும் லாபநோக்கம் அடையவும் இயலும்.



இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடையாள அட்டையான ஆதார் அட்டையின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பயனாளி அதிகபட்சமாக ஐந்து தளைகள் பெறலாம். தேவைப்படும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகி தளைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் மாடியில் தோட்டம் அமைப்பதற்காக பத்து வகையான காய்கறிவிதைகள், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம் மற்றும் பாஸ்போபாக்டீரியா அசாடிராக்டின், நீரில் கரையும் உரமான 18:18:18, பாலித்தீன் கவர் தேங்காய் நார் கழிவுடன் மற்றும் விளக்க கையேடு போன்றவை வழங்கப்படுகின்றன. மேற்கண்ட திட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறுதளைகள பெறுவதற்கு முழு விலை ரூ. 522.10 அதில் அரசு மானியத்தொகை ரூ.200 போக மீதியுள்ள தொகை ரூ. 322.10 செலுத்தி பெற்றுகொள்ளலாம்.



இது தொடர்பாக பயனாளி திரு. ஆறுமுகசாமி கூறுகையில்:- எனது ஊர் காந்திமாநகர், நான் மார்கெட்டிங் ஏஜெண்ட்டாக பணிபுரிகின்றேன். நான்  தோட்டக்கலைத்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்ட வீட்டுத் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான சிறுதளை மானிய விலையில் வாங்கி எனது வீட்டின் மாடியில் காய்கறிகளை வளர்த்து வருகிறேன். நான் மார்கெட்டிங் ஏஜெண்ட்டாக பணிபுரிகின்றேன். இந்த மடித் தோட்டத்தின் மூலம் பசுமையான, மருந்து அடிக்காத காய்கறிகளை, கீரைகளை தினமும் பறித்து, சமைத்து உண்டு மகிழ்கிறோம். எனது குடும்பத்தினரின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், ஒரு பயனுள்ள பொழுது போக்காகவும் இந்த திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. இதனால், எனக்கு உடலும் மனதும் ஆரோக்கியமாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தந்த தமிழகஅரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...